சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வளக்கில் வாக்குச்சீட்டில் முறைகேடு செய்த அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், தேவைப்பட்டால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக இருந்த குல்தீப் குமார் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேயர் தேர்தலின் வீடியோவைப் பார்த்த பிறகு, இந்திய தலைமை நீதிபதி (CJI) DY சந்திரசூட், அதிகாரி எப்படி வாக்குச் சீட்டை திருத்த முடியும்? இதுபோன்ற செயல்களுக்காக தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘தேவைப்பட்டால் மீண்டும் தேர்தல் நடத்தப்படும்’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனுடன் வாக்குச் சீட்டு மற்றும் வாக்குச் சீட்டு வீடியோவையும் உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

https://twitter.com/Politics_2022_/status/1754528958002102402

வாக்குச் சீட்டில் திருத்தம் செய்து பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவித்தது குறித்த வீடியோ ஆதாரத்துடன் வழக்கு தொடர்ந்த குல்தீப் குமார் இந்த தேர்தல் செல்லாது என அறிவித்து மறு தேர்தல் நடத்த வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க மறுத்த நீதிபதி வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.