டில்லி

பாபா ராம்தேவின் பதஞ்சலி அறிமுகப்படுத்திய இந்திய வாட்ஸ்அப் செயலியான கிம்போ மூலம் தகவல்கள் திருடப்படுவதாக கூறப்படுகிறது.

யோகாசன குருவான பாபா ராம்தேவ் பல்வேறு நுகர்வோர் பொருட்களை தயாரித்து பதஞ்சலி என்னும் பெயரில் விற்பனை செய்து வருகிறார்.  கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்பட்டு வரும் இப்பொருட்கள் இயற்கை மற்றும் சுதேசி என்பதால் வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருமளவில் உள்ளது.   இதற்குப் பின் ஆடை, தொலை தொடர்பு என தனது வர்த்தகத்தை பாபா ராம்தேவ் மேலும் விரிவாக்கினார்.

இப்போது கிம்போ என்னும் தகவல் செயலியை வெளியிட்டுள்ளார்.  கிம்போ என்னும் சம்ஸ்கிருத சொல்லுக்கு வாட்ஸ்அப் எனப் பொருள் என்பதால் அனைவரும் இதை இந்திய வாட்ஸ்அப் என அழைத்தனர்.   கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர் மூலம் வெளியிடப்பட்ட இந்த செயலியை கிட்டத்தட்ட 50000 பேர் பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்த தொடங்கினர்.

பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த இணையதள ஆராய்ச்சியாளர் ஒருவர் டிவிட்டரில், “கிம்போ செயலியில் பயணாளிகள் பதியும் செய்திகளை நான் இங்கிருந்தே படிக்கிறேன்.   வாட்ஸ்அப் உடன் போட்டி போடும் முன் உங்கள் செயலியை பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என பதிந்துள்ளார்.   இதனால் பயணாளிகளின் தகவல்கள் திருடப்படுவதை அறிந்து அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இந்த செயலியின் உரிமையாளர் பதஞ்சலியாக இருந்தாலும் இதை தயரித்தது அமெரிக்க மென்பொருள் நிறுவனமான ‘அப்டியோஸ்” நிறுவனம் ஆகும்.   இந்த செயலி முழுக்க முழுக்க இதே நிறுவனம் தயாரித்த போலோ மெசெஞ்சர் பொலவே உள்ளதாக உபயோகிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.   அத்துடன் தரவிறக்கம் செய்யும் போது ஒரு ஒண்டை பாஸ்வர்ட்கூட போலோ மெசெஞ்சர் பாஸ்வர்ட் போலவே உள்ளதால் பயணாலிகளுக்கு நம்பிக்கை முழுவதுமாக போய் விட்டது.

பதஞ்சலி நிறுவனம் இது குறித்து ஒன்றும் கூறாமல் தொழில் நுட்ப மேம்பாடு என கூறி இந்த செயலியை பழுது பார்த்து வருகிறது.  இந்த சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது