சென்னை:  தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வரும் 25ஆம் தேதி மிதமான மழை பெய்ய வாய்ப்பு!v சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை  வெயில் வாட்டத் தொடங்க நிலையில், கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக  மழை பெய்து, மக்களை குளிர்வித்து வருகிறது.  வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வால் தமிழகத்தில் மழை தொடர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று, அதிசய  நிகழ்வாக  புதுச்சேரி அடுத்த திருக்கனூர் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழை பெய்தது. இதை  பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது.மேலும் அதை பார்த்தவர்கள் செல்போன்களில் செல்பி எடுத்தும், படம் பிடித்தும், வீடியோவாக எடுத்தும் மகிழ்ந்த நிகழ்வும் நடந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி சேலம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழ்நாட்டில் வரும் 25ஆம் தேதி மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.