சென்னை:
மிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பில் இருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும், சென்னையில் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக , தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.