சென்னை:
மிழ்நாட்டில் 7,8 தேதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வங்கக்கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் வரும் 7ம் தேதி கனமழைக்கும், 8ம் தேதி மிகக் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியால், நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வரும் 7ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 8ம் தேதி தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளை ஒட்டி நகரக்கூடும் என்பதால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 7ம் தேதி நள்ளிரவு முதல் கனமழையும், 8ம் தேதி மிகக் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.