சென்னை:
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டில் கனமழை பெய்யும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் 5 நாட்களுக்குக் கனமழை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.