“மெட்ரோ” திரைப்படம் போல் செயின் பறிப்பில் ஈடுபட்ட மாணவர்கள்! பொதுமக்கள் சுற்றிவளைப்பு!

Must read

சென்னை:
மீபத்தில் வெளியான “மெட்ரோ” தமிழ்த் திரைப்படத்தில் கல்லூரி மாணவர்கள் செயின் பறிப்பில் ஈடுபடு குறித்து சொல்லப்பட்டிருந்தது. அதே போல நேற்று சென்னை சாந்தோம் பகுதியில் பெண்ணிடம்செயினை பறிக்க இரு வாலிபங்கள் முயன்றனர்.
நேற்று இரவு 11.30 மணியளவில் திருவான்மீயூரை சேர்ந்த மாலினி (18) என்பவர் சாந்தோம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த  இரு   வாலிபர்கள் அவருடைய கழுத்தில் இருந்த செயினை பறித்து இழுத்தனர்.   மாலினி அவர்களுடன் போராடியபடியே கூச்சலிட்டார்.

பிடிபட்ட கொள்ளையர்
பிடிபட்ட கொள்ளையர்

கூச்சலைக் கேட்ட அங்கிருந்த பொதுமக்கள், அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து  அடித்து உதைத்தனர். பிறகு  அவர்களை காவல்துறை வசம் ம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில்  ஒருவர் பெயர் வசீர் (20) மற்றும் சுரேஷ்குமார் (19)   என்பது தெரியவந்தது. இவர்களில் வசீர் தியாகராயா கல்லூரியில் பி.காம்  இரண்டாம் ஆண்டு  ஆண்டு பயின்று வருகிறார்.  இருவரும் ராயபுரத்தில் வசிக்கின்றனர்.
பட்டினப்பாக்கத்தில் கடந்த வாரம் வழிப்பறி கொள்ளையரை துரத்திச் சென்ற  நந்தினி என்ற இளம் பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.  நந்தினி உயிரிழந்த, 2 நாட்களில் ஒரு பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற மோட்டார் பைக் ஆசாமிகள் அந்த பெண் கூச்சலிட்டதால்  தப்பி ஓடிவிட்டனர்.
இந்த நிலையில், மீண்டும் ஒரு  பெண்ணிடம் செயின் பறிக்கும் முயற்சி நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article