சென்னையில் கடந்த சில மாதங்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக  பலரும் கவலையும் கண்டனமும் தெரிவிக்கிறார்கள்   ஆனால்  இதற்கு என்ன காரணம் என்பதை சிந்திப்பதே இல்லை” என்ற வருத்தமான குரல் காவலர்கள் இடையே எழுந்துள்ளது.
வாட்ஸ்அப்பில் தற்போது வலம் வரும், காவலர்களின் குமுறல் இது:
download (1)
“தமிழக காவல் துறையில் ஆள்பற்றாக்குறை இருப்பது எல்லோருக்கும் தெரியும்.  அறிந்ததே அதைப்போலவே சுமார் ஒரு கோடி பேர் வாழக்கூடிய சென்னையில் காவல்துறைக்கு 25000 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் தற்போது சுமார் 17000 பேர் மட்டுமே  பணியில் இருக்கிறார்கள்.
*ஒரு காவல் நிலையத்துக்கு இருசக்கர வாகனங்கள் மூன்று நான்கு சக்கர வாகனங்கள் மூன்று என ஆறு வாகனங்கள்  ரோந்து பணிக்காக உண்டு. சென்னையில் மொத்தம் இருப்பது 135 காவல் நிலையங்கள்.
ஆக 135 x  6 = 810  ரோந்து காவலர்கள்.
சென்னையில் ஒரு  கோடிக்கும் மேல் மக்கள் வாழ்கிறார்கள். அப்படியானால்  10,000,000÷810=12,345 அதாவது 12,345 பேருக்கு ஒரு காவலர் என்ற விகிதத்தில் காவலர் நிலை உள்ளது  இது குற்றம் தடுப்புக்கு ஏற்ற அளவில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.
மேலும் கடந்த 2013ம் ஆண்டு  ஆயுதப்படையிலுருந்து காவல் நிலையங்களுக்கு காவலர்களை  பணிமாற்றம் செய்ததோடு சரி.  அதன் புறகு  யாரையும் புதிதாக காவல் நிலையங்களுக்கு பணிமாற்றம் செய்யவில்லை.   ஆனால்  இந்த மூன்று வருடங்களில்  மாதம்  தலா 100 முதல் 200 பேர் வரை ஓய்வில் சென்றுள்ளார்கள் அப்படி பார்த்தால் ஏறத்தாழ சுமார் 3000 காவலர்களுக்கும் அதிகமாக பணி ஓய்வு பெற்றுள்ளனர்.
தவிர,  ஒவ்வொரு உயர் காவல் அதிகாரிகளின் வீடுகளிலும் ஆர்டலி என்று அழைக்கப்படும் வீட்டு வேலை, துணி துவைத்தல், சமையல், வீட்டு வாகன ஓட்டுனர், காய்கறி பால் வாங்கி வர, வீடு சுத்தம் செய்தல் போன்ற அனைத்து வீட்டு வேலைகளையும் சட்டம் ஒழுங்கில் பணியாற்ற வேண்டிய பயிற்சி முடித்த பணியில் உள்ள காவலர்களால் செய்யப்படுகிறது .  இது போன்று நூற்றுக்கணக்கான காவவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இப்படி சிரத்தை எடுத்து...
இப்படி சிரத்தை எடுத்து…

உதவி கமிஷனர் அலுவலகம் முதல் துணை, இணை, கூடுதல் கமிஷனர் அலுவலகங்களில் ஒவ்வொரு அலுவலகத்திலும் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் இரவு மற்றும் சனி ஞாயிறு விடுப்புடன் பணியே இல்லாமல் பணியாற்றி வருகிறனர். இதில் பலர் உயர் அலுவலர்களுக்கு புகார்தாரர்களிடம்  இருந்து பணம் பெற்று தரும் பணியினையும் புரிவதால் இன்னும் அதிக ஓய்வில் உள்ளனர் இவர்களின் எண்ணிக்கையும் நூற்றுக்கணக்கானக்கில் இருக்கும்.
ஸ்பெஷல் டீம் என்று ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காவலர்கள் உள்ளனர் இவர்கள் ஆய்வாளர்களுக்கு பணம் கலக்சன் செய்து கொடுப்பதையே கடமையாக கொண்டுள்ளனர்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகம், மற்றும் இணை ஆணையர் அலுவலகங்கள்(கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு) மண்டல அலுவலகங்களில் அமைச்சுப் பணியாளர்கள் தங்கள் பணியினை செய்யாததால் கூடுதலாக காவலர்களை அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் இவர்களின் எண்ணிக்கையும் சில நூறுகள் இருக்கும்.
இப்படி பயிற்சி எடுத்து..
இப்படி பயிற்சி எடுத்து..

இது தவிர CCB, CRB, SCP Control Room, IS என மக்களிடம் நேரடியாக பணியில் ஈடுபட்டாத wing களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது அதில் பணிபுரியும் காவலர்களின் எண்ணிக்கை ஆயிரங்களை தாண்டும்.
சென்னை ஆயுதப்படையில் (AR) மட்டும் சுமார் ஐயாயிரத்தை தாண்டும்
இதுமட்டுமின்றி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் எழுத்தர், உதவி எழுத்தர், கம்ப்யூட்டர், சிப்ரஸ்,  நீதிமன்ற MM & Sessions Court, ஆய்வாளர் மற்றும் சுற்றுக் காவல் வாகன ஓட்டும் காவலர்கள், காவலர் குடியிருப்புகளை பராமரிக்கும் காவலர், வாரண்ட் மற்றும் சம்மன்களை சார்வு செய்யும் காவலர்கள், தபால் எடுத்துச் செல்லும் காவலர் என நீண்டு கொண்டே செல்லும் பட்டியலில் எத்தனை ஆயிரம் பேர் ஆகு‌ம் என்பது தங்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
மேலே குறிப்பிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள காவலர்களை வேறு எந்த பணிக்கும் எந்த சூழ்நிலையிலும் அழைக்க முடியாது ஆனால் குறைந்த அளவிலே உள்ள 24 மணி நேரமும் மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் பீட் அலுவல் புரியும் காவலர்களுக்கு சுற்றுக் காவல் அலுவலை பல நேரங்களில் ரத்து செய்து குறிப்பாக முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்புப் பணியின் போது, திருவிழா பாதுகாப்பு பணிக்காக, போராட்ட பாதுகாப்பு பணியின் போது, போண்ற அனைத்து பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுகின்றனர் இதனால் ரோந்து அலுவலில் மிகப் பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது
இப்படி சீரழியறோம் (வடிவேலு.. திரைப்பட காட்சி)
இப்படி சீரழியறோம் (வடிவேலு.. திரைப்பட காட்சி)

இதனால்  காவல் நிலையங்களில் உள்ள வாகனங்கள் ரோந்து செல்வது குறைவே.
மேலும் ஜென்ரல் டியூட்டி பார்பவர்களுக்கும் சீருடையே அணியாமலும், அலுவலக, உயர் அதிகாரிகள் வீடுகளில் பணிபுரிபவர்களுக்குமான இடைவெளி அதிகரித்துள்ளது இதன் வெளிப்பாடு, பணிச்சுமை, விரக்தி; வெறுப்பு, சலிப்பு, மன உளைச்சல், மன அழுத்தம், உடலில் ஏற்படும் நோய் பாதிப்பு, போண்றவை அவர்களால் நார்மலாக பணிபுரிய இயலவில்லை இதனை உயர் அதிகாரிகள் உடனடியாக கலைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரோந்து மற்றும் ஜென்ரல் டியூட்டி பார்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் முறையான ஓய்வு கிடைக்க ஏற்பாடு செய்தால் காவலர்கள் இன்னும் கூடுதல் அக்கறையுடனும் ஈடுபாட்டுடனும் தங்கள் பணியினை செய்வார்கள் கண்டிப்பாக சென்னை அமைதி பூங்காவாக திகழும்.