ராமேஸ்வரம்

லங்கை ராணுவத்தினரால் ராமேஸ்வர மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லும் போது அவர்களை இலங்கை ராணுவத்தினர் சிறை பிடித்துச்  செல்லும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வந்தது.   இதனால் மீனவர்கள் கடும் அச்சத்தில் இருந்தனர்   சமீபகாலமாக இந்த நிகழ்வு சற்று குறைந்து இருந்தது.

நேற்று ராமேஸ்வரத்திலிருந்து  சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்   இவர்கள் இன்று அதிகாலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துரைசிங்கம் என்பவரது விசைப்படகைச் சிறை பிடித்தனர்.

இந்த படகில் இருந்த

1. ேஜாசப் பால்ராஜ் (37)
2. பெனிட்டோ (40)
3 நாகராஜ் (45)
4. இன்னாசி (22)
5. சுப்பிரமணி (35)
6. முனியசாமி (48)
7. சத்தியசீலன் (25)

ஆகிய 7 மீனவர்களைச் சிறை பிடித்த ராணுவத்தினர் அவர்களை தலைமன்னார் கடற்படை துறைமுகம் கொண்டு சென்றுள்ளனர்.

மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.