டெல்லி: மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி உள்ளது.
புதிய வகை கொரோனா உலக நாடுகளில் பரவி வருவதால், இந்தியாவில் அதன் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை முடுக்கி விட்டுள்ளன. அதுபோல, கொரோனா பரவலின் 2வது அலை காலக்கட்டத்தின்போது, டெல்லி உள்பட பல பகுதிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது. இதனால், கொரோனா இழப்புகளும் அதிகரித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் மருத்துமனைகளிலும் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்யும் விதமாக மத்திய- மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அதானி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஸ் இருக்கும் வகையில், ஆக்சிஜன் ஆலை தொடர்ந்து செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். திரவ மருத்துவ ஆக்சிஜன் மருத்துவமனை வளாகத்தில் இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் உடனடியாக அதை நிறப்பும் பணிகள் நடைபெற வேண்டும்.
ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு இருப்பதை உறுதி செய்யவேண்டும். ஆக்சிஜன் உபகரண கருவிகள், வெட்டிலேட்டர், சுவாச கருவிகள் போன்றவை போதிய அளவில் இருப்தை உறுதி செய்ய வேண்டும். மாநிலங்கள் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைத்து கொள்ளலாம். ஆக்சிஜன் இருப்பு குறையும் பட்சத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்து, அதை நிவர்த்தி செய்யும் பணியை மேற்கொள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.