மதுரை:

மிழகத்தில் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்த மத்திய அரசு, அதற்கான நிதி ஒதுக்காத நிலையில் கடந்த ஜனவரி வாதம் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த மருத்துருவமனை அமைவது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், சுமார் 4 மாதங்களுக்கு தற்போது, மருத்துவமனை அமைவது குறித்து முதற்கட்ட ஆய்வுப் பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. ஜப்பான் நாட்டு நிபுணர்களுடன் மத்திய குழுவினர் இன்று மதுரை தோப்பூருக்கு வந்து  ஆய்வு நடத்தினார்.

ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். ஜெயலலிதாவின் தொடர் வலியுறுத்தல் காரணமாக தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்  கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

தொடர்ந்து இடம் தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்ட நிலையில், இறுதியாக மதுரை அருகே உள்ள தோப்பூர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி 27 ந்தேத அன்று தமிழக முதல்வர் மற்றும் கவர்னர் முன்னிலையில், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

அதன்படி,   ரூ 1264 கோடி திட்ட மதிப்பீட்டில்  202 ஏக்கரில் 750 படுக்கை வசதியுடன் கட்டப்படும் 100 எம்.பி.பி.எஸ் படிப்புக்கான இடங்களும், 60 செவிலியர் படிப்பிற்கான இடங்களும் அனுமதிக்கப் படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிலத்தை தமிழக அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை என்றும், எய்ம்ஸ் கட்டுமானம் குறித்த திட்ட அறிக்கையும் இன்னும் தயார் செய்யப்பட வில்லை… தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு  தகவல் தெரிவித்திருந்தது. இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சுமார் 4 மாதங்களுக்கு பிறகு தற்போது,  மத்திய அரசுத் தரப்பில் முதல் கட்டமாக ஆய்வுப் பணிகளை இன்று தொடங்கி உள்ளனர்.

ஜப்பான் நாட்டு நிபுணர்கள் குழுவுடன் மத்தியஅரசு அதிகாரி  சஞ்சய் ராய் தலைமையிலான மத்திய அரசின் குழுவினர் ஆய்வு செய்தனர்.