நெட்டிசன்:
வாட்ஸ்அப் பதிவு:
மத்திய அமைச்சர் சதானந்தாகவுடாவிற்கே இந்த நிலைமை என்றால் கிராமத்து கூலித்தொழிலாளி என்ன செய்வான்??
மத்திய அமைச்சர் சதானந்தாகவுடாவின் சகோதர்ர் மங்களூரில் உள்ள kmc மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதுவரை 13 இலட்சம் வரை கட்டியுள்ளனர்.
sadanand-gowda-brother-death-demonetisation-min
அவர் மருத்துவமனையில் இறந்துவிடுகிறார். நிலுவை பணம் 48000 கட்டவேண்டும்.
500, 1000 கட்டுவதாக சொன்னார்கள். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ஒத்துக்கொள்ளவில்லை.
மருத்துவமனையில் சதானந்தாகவுடாவே இருந்துள்ளார்.
500, 1000 வாங்க மாட்டோம் என எழுதி தருமாறு கேட்டிருக்கிறார்.
எழுதித்தருமாறு மத்திய அமைச்சர் கேட்டதே மோடி அறிவிப்புபடி தவறு.
தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது இப்போது புரிகிறதா?? அதையும் மருத்துவமனை நிர்வாகம் எழுதிக்கொடுத்தது.
அதன் பின்பு 48000 க்கு செக் கொடுத்ததார்கள். அதன் பின்பு உடலை கொடுத்துள்ளார்கள்!!!
சாதாரண விவசாயியாக இருந்தால் செக் கொடுத்தால் ஒத்துக்கொள்வார்களா??
2000 ருபாயாக எத்தனை நாள் மாற்றி,  உடலை வாங்க வேண்டும்.
மத்திய அமைச்சருக்கே இந்த நிலை எனில் நாடு முழுவதும் ஏழை மக்கள் மருத்துவமனைகளில் பட்ட கொடுமைகள் என்ன??
எத்தனை உயிர்கள் போனதோ!!
இதைப்பற்றி மத்திய அரசு சிந்தித்திருக்கவேண்டும் என்று சொல்லாமல் இருப்பவன் தான் வெகுஜன விரோதி..
மோடி அவர்களே!! சிந்தியுங்கள்
sadananda-gowda