டில்லி
தமிழ்நாட்டில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்காக எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு இந்த மருத்துவமனை அமைக்க நிதி உதவிக்காக 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜைக்கா நிறுவனத்திடம் கடன் ஒப்பந்தம் கைஎய்ழுத்தானது.
இதுவரை மருத்துவமனை அமைக்கும் பணி தொடங்கவில்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. சட்டப்பேரவை தேர்தலின் போது இது குறித்த் திமுக சார்பில் பிரசாரத்தில் பேசப்பட்டது. இந்த தேர்தலில் மத்திய ஆளும் கட்சி கூட்டணி தோல்வி அடைந்து திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மதுரையில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ம்கக்களவையில் கேள்வி எழுபபப்டது. இன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார்.
அந்த பதிலில் தமிழகஹ்த்டில் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019-20 ஆம் ஆண்டு ரூ.3.12 கோடியும் 2020-21 ஆம் ஆண்டு ரூ.4.23 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அமைச்சரின் பதிலின்படி உபி மாநிலம் ரேபரேலி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அதிக பட்சமாக 176.54 கோடி மற்றும் 200.24 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.