இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்க நிறுவனமான நோவாவேக்ஸ் தயாரித்துள்ள கோவோவேக்ஸ் எனும் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலைப் பெறும் ஒன்பதாவது மருந்து இந்த கோவோவேக்ஸ்.

இந்த மருந்தை அவசர தேவைக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கிய மூன்றாம் உலக நாடுகளில் 41 நாடுகளில் இதுவரை 10 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. தவிர, 98 நாடுகளில் 40 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

அதனால் தடுப்பூசிக்கான தேவை இன்னமும் இருப்பதால் கோவோவேக்ஸ் விற்பனை அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கும் நோவாவேக்ஸ் நிறுவனம் இந்த தடுப்பூசி உற்பத்தி செய்யும் உரிமையை சீரம் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.