கொல்கத்தா

ம்பன் புயலால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு உடனடி நிவாரணமாக ரூ.1000 கோடி அளித்துள்ளது..

கடந்த புதன்கிழமை அம்பன் புயல் மேற்கு வங்கத்தில் கரையைக் கடந்தது.  இதனால் 190 கிமீ வேகத்தில் காற்று வீசு கடும் மழை பெய்தது.  இதில் ஏராளமான வீடுகளும் பயிர்களும் கடுமையாகச் சேதம் அடைந்தன.   இதுவரை புயலால் 80 பேர் உயிர் இழந்துள்ளனர்.  ஒரிசா மாநிலமும் இதே புயலால் பாதிக்கப்பட்டது.   புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் காணப் பிரதமர் மோடி தனி விமானத்தில் மேற்கு வங்கம் சென்றார்.

அங்கிருந்து அவர் ஆளுநர் ஜகதீப் தன்கர், முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் ஹெலிகாப்டர் மூலம், சென்று பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார்.  அதன் பிறகு ஆளுநர், முதல்வர், உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் ஒன்றைப் பிரதமர் நடத்தினார்.  அப்போது மத்திய அரசு உடனடி நிவாரணத் தொகையாக ரூ.1000 கோடி வழக்கும் எனப் பிரதமர் அறிவித்தார்.

இன்று மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  அந்த கூட்டத்தில் மேற்கு வங்க மாநில அரசு பிரதமர் அறிவித்தபடி உடனடி நிவாரணத் தொகையாக ரூ.1000 கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளதாக அறிவித்தது.  மேலும் விரைவில் மத்தியக் குழு புயல் சேதங்களை மதிப்பிட அனுப்பி வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.