சென்னை

நேற்று கனமழை பெய்து மக்கள் தவித்ததற்கு மத்திய அரசின் தாமதமே காரணம் என திமுக எம் பி தயாநிதி மாறன் கூறி உள்ளார்.

நேற்று திடீர் எனப் பெய்த கனமழையால் சென்னை நகரப் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகினார்கள்.  பல இடங்களில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது.   அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோருக்குப் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.  கடும் மழை காரணமாக சுரங்கப்பாலங்களில் நீர் தேங்கி  பாலங்கள் மூடப்பட்டன.

தமிழக அரசு இதையொட்டி மழை நீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.    பல இடங்களில் ராட்சத மோட்டார்கள் கொண்டு மழைநீரை அகற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது.  இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடாமல் மழை பெய்து வருகிறது.   சென்னை உள்ளிட்ட 4 மாநிலங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக மக்களவை உறுப்பினருமான தயாநிதி மாறன், “சென்னையில் நேற்று பெய்த பெருமழையால் பொதுமக்கள் நெரிசலில் சிக்கித் தவித்ததற்கு மத்திய அரசின் தாமதமே காரணம் ஆகும்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் ரேடார் கருவிகள் பழுதடைந்துள்ளதால் நேற்று மழை குறித்த வானிலை முன் அறிவிப்பைத் தர இயலவில்லை. எனவே மத்திய அரசு ரேடார் கருவிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.  இது குறித்து பிரதமருக்கு 2 கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன.  ஆனால் பிரதமர் அலுவகலக்ம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  உடனடியாக ரேடாரக்ளை சீரமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மழை, வெள்ள நிவாரணம் குறித்து 3 முறை கோரிக்கை விடுத்துள்ளார்.  ஆனால் மத்திய அரசு இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.   எனவே தமிழக அரசு கோரிய மழை வெள்ள நிவாரணங்களை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.