சென்னை: விடியா அரசு 8 மாதங்களில் சாதித்தது என்ன? எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். சென்னையில் நேற்று மீணடும் பெய்த மழையால், மாநகரமே வெள்ளத்தில் மிதந்தது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

சென்னையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது,  ‘கடந்த 10 வருட ஆட்சியில் அ.தி.மு.க எதுவும் செய்ய வில்லை. சென்னையை 10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்துள்ளதால்தான் மழைநீர் இப்படி தேங்குகிறது. அடுத்த பருவ மழைக்குள் மீண்டும் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இந்த நிலையில், ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசை,  சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்  எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்து உள்ளார்.  ஒருநாள் மழைக்கு மீண்டும்  சென்னை மிதக்கிறது என்று கூறியுள்ளது, ஸ்டாலினின்  விடியா அரசு 8 மாதங்களில் என்ன சாதித்தது என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது சம்பந்தப்பட்ட அமைச்சரை பதவி விலகச்சொன்னவர், அமைச்சர் செந்தில் பாலாஜியை ராஜினாமா செய்ய சொல்வாரா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,