சிம்லா

த்திய அரசு மூன்றாம் அலை கொரோனாவை எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறி உள்ளார்.

மத்திய அமைச்சரவையில் ஐடி துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக சில மாதங்களுக்கு முன்பு அனுராக தாக்குர்  பொறுப்பேற்றார்.  தற்போது அவர் தனது சொந்த மாவிலைமான இமாசல பிரதேசத்துக்கு ஐந்து நாட்கள் சென்றுள்ளார்.

அனுராக் தாக்குர் அங்குச் செய்தியாளர்களிடம், “மத்திய அரசு மூன்றாம் அலை கொரோனாவை எதிர் கொள்ள தயாராக உள்ளது.  இந்த நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு ரூ.23,123 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

முதல் இரண்டு அலையில் பெரியவர்கள் கொரோனாவல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிப்பு அடைவர் என நிபுணர்கள் கணித்துக் கூறி உள்ளனர்.  ஆகவே மத்திய அரசு சார்பில் குழந்தைகள் நலனுக்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.