டில்லி

இளைஞர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சிலையை ராகுல் காந்தி திறந்து வைத்துள்ளார்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேரனும், முதல் இந்தியப் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் மகனுமான ராஜிவ் காந்தி கடந்த 1944  ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி பிறந்தவர் ஆவார்.   கடந்த 1984 ஆம் வருடம் இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு இவர் பிரதமர் பொறுப்பை ஏற்றுக கொண்டார்.

புகழ்பெற்ற இந்திய அரசியல் குடும்பத்தில் பிறந்தும் அரசியலில் ஆர்வம் இல்லாமல் இவர் விமானியாகப் பணி  புரிந்து வந்தார்.  இந்திரா காந்தியின் வாரிசாக செயல்படுவார் என நம்பப்பட்ட இவரது தம்பி சஞ்சய் காந்தி விமான் விபத்தில் உயிர் இழந்தார்.  அதன்பிறகு தாயாருக்கு உதவியாக அரசியலுக்கு வந்து அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த 1981 ஆம் வருடம் நடந்த தேர்தலில் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த போது மே மாதம் 21 ஆம் தேதி மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.   இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா அளிக்கப்பட்டுள்ளது.

இன்று ராஜிவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நாடெங்கும் அவர் சிலைக்கு மாலைகள் அளித்து மரியாதை செலுத்தப்படுகிறது.  டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் நினைவஞ்சலி நடந்தது.  அவரது மகனும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி இன்று இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைமையகத்தில் ராஜிவ் காந்தி சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்தி உள்ளார்.

அதன் வீடியோ காட்சி இதோ