டில்லி

சிபிஐ இயக்குனர் இட மாற்றத்தை தொடர்ந்து சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவை மத்திய அரசு பணிநீக்கம் செய்துள்ளது.

சிபிஐ இயக்குனராக பதவி வகித்த அலோக் வர்மா மற்றும் சிபிஐ சிறப்பு இயக்குனராக பதவி வகித்த ராகேஷ் அஸ்தானா இடையில் மோதல் நிலவி வந்தது. இருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மத்திய அரசு இருவரையும் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசு உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

மீண்டும் பதவியில் சேர்ந்த சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மீது சிபிஐ இயக்குனர் தேர்வு ஆணையம் விசாரணை நடத்தி அலோக் வர்மாவை சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கியது. அத்துடன் அவரை தீயணைப்பு மற்றும் ஊர்காவல் படை இயக்குனராக பணி மாற்றம் செய்தது. அதை எதிர்த்து அலோக் வர்மா பணியில் இருந்து விலகினார். அலோக் வர்மா பணி இட மாற்றத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் மற்றொரு அதிரடி நடவடிக்கையாக  மத்திய அரசு நேற்று சிபிஐ இணை இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானாவை திடீர் என பதவி நீக்கம் செய்துள்ளது. அரசு பிறப்பித்துள்ள அந்த உத்தரவில் சிபிஐ இணை இயக்குனர் அருண்குமார் சர்மா, டிஐஜி மனிஷ்குமர் சின்கா, சுப்பிரண்ட் ஜெயந்த் நாய்கனவரே உள்ளிட்ட மூன்று அதிகாரிகளும் பனி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.