ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்க மத்தியஅரசு ஒப்புதல்!

Must read

டில்லி :
ந்திய ராணுவத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர் தலைமையில் ராணுவ அமைச்சகத்தின் பாதுகாப்பு தளவாட கொள்முதல் குழுவின் கூட்டம் நடைபெற்றது.  ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள் வாங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டது.
t90-tank-geli
இந்திய ராணுவத்தின்  6 படை பிரிவுக்கு தேவையான பீப்பாய் ராக்கெட் லாஞ்சர் 14633 கோடி ரூபாய்க்கு வாங்கவும்,
மேலும் 464 ரஷ்யாவின் T90 ரக டேங்க் ரூ 13.448 கோடியில் கொள்முதல் செய்யவும்,
இந்திய விமானப்படைக்கு 83 LCA தேஜாஸ் விமானங்கள் ரூ.50.02 கோடியில் வாங்கவும்,
மேலும் 15 லைட் காம்பாட் ஹெலிகாப்டர் ரூ2911 கோடியில் வாங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய விமானப்படைக்கும், ராணுவத்துக்கும் பயன்படுத்தப்படும்.
அதில், ரூ.82 ஆயிரம் கோடி மதிப்புள்ள பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டதாக  தகவல்கள் தெரிவிக்கிறது.
மேலும்,  இந்திய விமானப்படைக்கு 83 இலகுரக போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளது.
மேலும் கூட்டத்தில் 12 ஜப்பான் விமானங்கள் வாங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.
இதுதொடர்பான ஒப்பந்தம், பிரதமர் மோடியின் ஜப்பான் பயணத்தின்போது கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article