சென்னை:

டெல்லி பல்லைக்கழக மாணவர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை வன்முறை கும்பல் ஒன்று கடுமையாக தாக்கிய நிலையில்,  தாக்குதலில்காயம் அடைந்த ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவரை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தன்னை எதிர்த்து எழக்கூடிய எந்த குரலுக்கும் வன்முறையே பதில் என்ற மனநிலையை மத்திய அரசு கொண்டுள்ளது என்று கடுமையாக சாடியவர்,  நடிகை தீபிகா படுகோனேவுக்கும் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை  அன்று மாலை ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்த  முகமூடி கும்பல், அங்கிருந்த மாணவர்களை கம்பு, உருட்டுக் கட்டை,  இரும்புக் கம்பி போன்ற ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் காயம் அடைந்னதர். மாணவர் சங்க தலைவி ஆயிஷ் கோஷ் உள்பட 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இந்துத்துவா அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பை சேர்ந்தவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  திமுகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் கனிமொழி, ஜேன்என்யு பல்கலைக்கழகம் சென்று அங்க மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், மாணவர்களின் போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தன்னை எதிர்த்து எழக்கூடிய எந்த குரலுக்கும் வன்முறையே பதில் என்ற மனநிலையை மத்திய அரசு கொண்டுள்ளது என்று கடுமையாக சாடினார்.

அப்போது செய்தியாளர்கள், தீபிகா படுகோனே குறித்து  சமூக வலைதளங்களில் பாஜக பிரச்சாரம் செய்வது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த கனிமொழி, “நான் இந்தி திரைப்படங்களை அதிகம் பார்க்க மாட்டேன். தீபிகாவுக்கு எதிரான இந்தப் பிரச்சாரம், என்னைப் போன்றவர்களை, தீபிகாவின் படங்களைப் பார்த்து அவரை ஆதரிக்க வழி வகுத்துள்ளது” எனத் தெரிவித்தார்.