2ஜி வழக்கில் மேல் முறையீடு செய்ய சிபிஐ.க்கு மத்திய அரசு அனுமதி

Must read

டில்லி :

2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சிபிஐ முடிவு செய்தது.

இது குறுத்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியது. பின்னர் மத்திய சட்ட அமைச்சகத்திடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மத்திய சட்ட அமைச்சகம் எழுத்துப் பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பணிகளில் சிபிஐ ஈடுபட்டுள்ளது.

More articles

Latest article