டில்லி:

காவிரி விவகாரம் குறித்த தீர்ப்பில், ஸ்கீம் என்று குறிப்பிடப்பட்டதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டு உச்ச நீதிமன்றத்தல் மத்திய அரசு மனுத்தாக்கல் சற்று நேரத்தில் மனுத்தாக்கல் செய்ய இருக்கிறது.

காவிரி விவகாரம் குறித்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பில் ஸ்கீம் என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு இதை 6 வார காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தது.

இந்த ஸ்கீம் என்ற வார்த்தைக்கு காவிரி மேலாண்மை வாரியம் என்றே அர்த்தம் என தமிழக அரசியல் கட்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதை கர்நாடக அரசும், அம்மாநில கட்சிகளும் மறுக்கின்றன.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இன்று மத்திய அரசு, காவிரி விவகாரம் குறித்த தீர்ப்பில், ஸ்கீம் என்று குறிப்பிடப்பட்டதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டு உச்ச நீதிமன்றத்தல் மனுத்தாக்கல் சற்று நேரத்தில் மனுத்தாக்கல் செய்ய இருக்கிறது.

மேலும் தீர்ப்பை அமல் படுத்த மூன்று மாத காலம் அவகாசம் கோரியும் மனுத்தாக்கல் செய்ய இருக்கிறது.