சென்னை:
கொரோனாதொற்று குறையாமல் இருந்திருந்தால் டாஸ்மாக் கடையை திறக்க அரசு அனுமதித்திருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்திலபாலாஜி, “ 27 மாவட்டங்களில் கொரோனா குறைந்ததால் டாஸ்மாக் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 11 மாவட்டங்களில் கொரோனா குறையாததால் டாஸ்மாக் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா உச்சத்தில் இருந்த போது கடந்த ஆட்சியில் டாஸ்மாக் திறக்கப்பட்டது, உச்சத்தில் கொரோனா இருக்கும் போது டாஸ்மாக் கடையை திறப்பதற்கு அப்போது திமுக எதிர்ப்பு தெரிவித்தது” என தெரிவித்தார்.