சென்னை

பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைத்தால் அறநிலையத்துறை இருக்காது என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார..

இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஆந்திராவில் வந்த ஐயப்ப பக்தர்களைத்  தமிழக இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் தாக்கியதாக புகார் எழுந்தது.   இதையொட்டி அறநிலையத்துறை மீது கடும் பாஜக, மற்றும் அதிமுகவினர் தொடர்ந்து கண்டன்ம தெரிவித்து வருகின்றனர்/

அறைநிலையத்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில்,

“ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த ஆந்திர ஐயப்ப பக்தர்கள் கூட்டத்தில் முண்டி அடுத்துச் சென்றதால் மற்ற பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டு அவர்களை காவலர்க்ள் தடுத்துள்ளனர்.  எனவே அவர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றிக் கைகலப்பானது.  இதில் ஒரு ஐயப்ப பக்தர் அடிபட்டதில் மேலும் குழப்பம் உண்டானது” 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில்.

”கோயிலுக்கு வரும் பக்தர்களை அநாகரீகமாக நடத்துவதையும், இந்து கோயில் பாரம்பரியத்தைச் சீர்குலைப்பதிலும் தொடர்ந்து முழு முச்சுடன் செயல்பட்டு வரும் அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் பக்தர்கள் மீது சரமாரி தாக்குதல்..!

கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் பறிக்கும் அறநிலையத்துறை..!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையே தேவையில்லை.

இந்துக்களை பிடிக்காத திமுக அரசிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்..!

தமிழகத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது”

எனத் தெரிவித்துள்ளார்.