இந்திய சர்வதேச கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருக்கும் தமிழக வீரர் நடராஜன், ஆஸ்திரேலியா உடனான தனது முதல் ஒருநாள் சர்வதேச போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

அடுத்து நடந்த டி-20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய வீரர்களின் விக்கெட்டுகளை அள்ளிய நடராஜன், இந்திய அணியின் டி-20 வெற்றிக்கு வழி வகுத்தார்.

சேலம் சின்னப்பம்பட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய அணியில் இடம் பெற்று முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் அணியில் விளையாடும் நடராஜன், அனுபவமுள்ள வீரர்களை போல பந்துவீசி அனைவரின் மனதையும் கவர்ந்தார்.

இன்று நடந்த இறுதி டி-20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற போதும், இந்த தொடரை இந்தியா கைப்பற்றியது. கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, மற்றும் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்ட ஹ்ரிதிக் பாண்டிய ஆகியோர் கோப்பையை நடராஜனிடம் கொடுத்து மகிழ்ந்ததோடு, இந்த வெற்றிக்கு நடராஜனும் ஒரு காரணம் என்று வெகுவாக புகழ்ந்தனர்.

தங்கள் கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞர் சர்வதேச அளவில் புகழ் பெற்றதை பார்த்த சின்னப்பம்பட்டி கிராம மக்கள், பட்டாசு வெடித்து கொண்டாடினர், , இந்த வானவேடிக்கை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.