மும்பை

மும்பையில் அந்தேரி ரெயில் நிலையத்தின் கூறையில் இருந்து ஒரு சிலாப் விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் படுகாயம் அடைந்தனர்.

வடோதராவை சேர்ந்தவர் ஆயிஷா.  இவர் தனது மகன் மற்றும் அண்ணன் மகன் ஆகியோருடன் ரெயிலில் பயணம் செய்ய அந்தேரி ரெயில் நிலையத்துக்கு வந்துள்ளனர்    ஆயிஷாவும் அவரது மருமகனையும் ஒரு ஓரமாக நிற்க வைத்துவிட்டு ஆயிஷாவின் மகன் பயணச்சீட்டு வாங்க சென்றுள்ளார்.

அப்போது திடீரென்று ரெயில் நிலையத்தின் மேற்கூரையில் இருந்து ஒரு சிலாப் ஆயிஷாவின் தலையில் விழுந்தது.   அவர் தலையில் இருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்துள்ளது.    அருகில் இருந்த அவர் மருமகனுக்கும் அடிபட்டுள்ளது.   ஆயிஷாவை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.   அவருக்கு மண்டை ஓட்டில் சிறு விரிசல் ஏற்பட்டதால் தையல் போடப்பட்டுள்ளதாகவும்  சிறுவனுக்கு அதிகம் அடிபடவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையச் சேர்ந்த சிலர் ஆயிஷாவுக்கு தலையில் 27 தையல்கள் போடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.   இது குறித்து அடிபட்டவர்கள் அந்தேரி ரெயில் நிலையத்தின் மீது காவல்துறையில் புகார் கொடுக்க உள்ளனர்.   ரெயில்வே நிர்வாகம்  இது ஒரு சிறு விபத்து எனவும் அதற்காக அவருக்கு ரூ.500 இழப்பீடு தரப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இந்த அந்தேரி ரெயில் நிலையம் முழுமையாக இடிக்கப்பட்டு கடந்த 2015ஆம் வருடம் புதிகாகக் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.