சென்னை:

மிழகத்தில் வாக்குப் பதிவு நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க முடிவு செய்யபட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா  இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் 234 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டியுள்ளது என்றும்,  வழக்கமாக வாக்குப்பதிவு தமிழகத்தில் அதிகமாகவே இருக்கும் என்றும் தெரிவித்தார். அதற்காக  இம்முறை வாக்கு சதவீதத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும், வாக்குப்பதிவு மையங்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்தில் இருந்து 93 ஆயிரமாக உயர்த்தப்படும். விழாக்காலம், மாணவர்களுக்கான தேர்வு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டே தேர்தல் தேதி இறுதி செய்யப்படும்.

வாக்காளர்கள் எந்தவித தயக்கமும் இன்றி வாக்குச்சாவடிக்கு வர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதால் இவ்வாறு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் செலவின பார்வையாளர்கள் கூடுதலாக நியமிக்கப்படுவார்கள். பாதுகாப்பு பணிக்கு முழு அளவில் மாநில போலீசார் பயன்படுத்தப்படுவர். மத்திய படைகளும் பயன்படுத்தப்படும்  சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று கூறினார்.