சென்னை: தமிழக சட்டப்பேரவையில், கனிம வள கடத்தலை தடுக்க சிசிடிவி கேமிரா பொருத்த தமிழக அரசு சட்டதிருத்தம் செய்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா உள்பட 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கனிம வள கடத்தலை தடுக்க சிசிவிடி கேமிரா பொருத்தும் வகையிலான தமிழக அரசு சட்டதிருத்தமும் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இந்த மசோதாப்படி, கனிம வளங்களின் கடத்தலை தடுக்கும் வகையில் தேவவையான இடங்களில் சிசிடிடி காமிரா பொருத்தும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக மாவட்ட எஸ்பியுடன் ஆலோசனை செய்து தேவைப்படும் இடத்தில் சிசிடிவி பொறுத்த மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சிசிடிடிவ த கட்டுப்பாட்டு மையம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தான் இயங்க வேண்டும், அதை கண்காணித்து கனிம வளங்கள் கொள்ளைப் போவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.