சென்னையில் பல இடங்களில் சிசி டிவி கேமரா பொருத்தப்படுகிறது

Must read

சென்னை:
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொல்லப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரயில் நிலையத்தில் சி.சி. டிவி கேமரா இல்லாததால்தான் குற்றவாளியை அடையாளம் காண முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து சென்னையின் முக்கிய சாலை சந்திப்புகளில் சிசி டிவி கேமரா பொறுத்த அரசு முடிவெடுத்தது. ஏற்கெனவே சில பகுதிகளில் இருந்தாலும், பரவலாக பல இடங்களில் சிசிடிவி கேமரா பொறுத்த தீர்மானிக்கப்பட்டது.
IMG-20160701-WA0027
இதையடுத்து  மிகவும் திறன் வாய்ந்த,இரவுவில் மிக தெளிவாக படத்தை பதிவு செய்யக்கூடிய CC கேமராக்கள் .மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பொருத்தப்பட்டு வருகிறது. இவை சூரிய மின் சக்தியில் இயங்கக்கூடியது. ஆன்லயனில் இயங்கும் இந்ச கேமரா பதிவுகளை உடனுக்குடன் செனனை காவல்துறை ஆணையர் அலுவல கண்ட்ரோல் ரூமில் பார்க்க முடியும்.
தற்போது இது போன்ற கேமரா  சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகில் பொருத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து மேலும் பல பகுதிகளில் இது போன்ற கேமராக்கள் பொருத்தப்படும்.

More articles

1 COMMENT

Latest article