டில்லி:

12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொருளாதார பாடத்திற்கான மறுதேர்வு ஏப்ரல் 25ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணிதம், பிளஸ் 2 பொருளாதாரம் ஆகிய தேர்வுகளின் வினாத்தாள் தேர்வுக்கு முன்னரே வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த 2 பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மறுதேர்வு தேதியை சிபிஎஸ்இ தற்போது வெளியிட்டுள்ளது. 12ம் வகுப்பு பொருளாதார மறுதேர்வு ஏப்ரல் 25ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 10ம் வகுப்பு கணிதப் பாட மறுதேர்வு டில்லி, ஹரியானா மாநிலங்களில் ஜூலை மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி 15 நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது.