டெல்லி: சிபிஎஸ்இ பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடர்பான வழக்கில், 2 நாட்களில் முடிவு தெரிவிப்பதாக உச்சநீதி மன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.

கொரோனா  2வது அலையின் தாக்கம் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால், பிளஸ்2 பொதுத்தேர்வு நடத்தப்படாமல் உள்ளது.  இதையடுத்து, CBSE 10-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து எனவும் CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்படவில்லைர.  ஆனால், பல மாநிலங்களில் கொரோனா தடுப்பு பொதுமுடக்கம்  நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மாணவர்கள், பெற்றோர்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் பலர்  வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்களது மனுவில், பிளஸ்2 தேர்வு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

விசாரணையின்போது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக மத்திய அரசு என்ன முடிவு செய்திருக்கிறீர்கள்..? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியத.

இதற்கு பதில் கூறிய மத்தியஅரசு வழக்கறிஞர் வேணுகோபால்,  அடுத்த இரண்டு நாட்களில் இந்த விவகாரம் தொடர்பாக முடிவு எடுத்து விடுவோம், அதுவரை வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், நீங்கள் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுங்கள் ஆனால் அவை  கொள்கை முடிவாக இருக்க வேண்டும் என தெரிவித்து  வழக்கை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.