நொய்டா

பதவி நீக்கம் செய்யபட்ட வருமான வரி ஆணையர் எஸ் கே ஸ்ரீவத்சாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

மத்திய பாஜக அரசு பதவி ஏற்றதில் இருந்து பல நேர்மையற்ற அதிகாரிகளை களை எடுத்து வருகிறது. அரசுத் துறையில் பல பெரிய பதவிகளில் உள்ளவர்களும் இந்த நடவடிக்கைக்கு தப்பவில்லை. அவ்வகையில் வருமான வரி ஆணையராக பதவி வகித்த எஸ் கே ஸ்ரீவத்சா கட்டாய ஓய்வு அளித்து பதவி நீக்கப்பட்டார்.

ஸ்ரீவத்சா மீது ஏராளமான புகார்கள் இருந்ததை ஒட்டி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு நொய்டாவில் உள்ள அவர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை நேற்று இரவு வரை நீடித்தது.

சோதனையில் கிடைத்த விவரங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியிடவில்லை. ஆனால் அவர் மீது மோசடி, போர்ஜரி, மற்றும் தேவையற்ற ஆதாயங்கள் பெறுதல் போன்ற பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.