சிபிஐ விசாரணை தேவை: டெல்லியில் முத்துகிருஷ்ணன் தந்தை பேட்டி!

Must read

டில்லி,

டில்லி ஜவஹ்ர்லால் பல்கலைக்கழகத்தில், தமிழகத்தை சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனது மகன் மரணத்தில் மர்மம் உள்ளது. ஆகவே, சிபிஐ விசாரணை தேவை என்று கூறி உள்ளார்.

சேலத்தை சேர்ந்த ஜேஎன்யூ மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரி வருகின்றனர்.

இந்நிலையில், முத்துகிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம் இன்று காலை டில்லி சென்றடைந்தார்.

அவர், மகனின் உடலை பார்த்து கதறி அழுந்தார்.

அதையடுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, முத்துக்கிருஷ்ணன் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் முத்துகிருஷ்ணனின் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், பிரேத பரிசோதனையின் போது தனது தரப்பு மருத்துவர்கள் உடன் இருக்கும் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

More articles

Latest article