லஞ்சம் வாங்கிய FSSAI உதவி இயக்குனரை சிபிஐ கையும் களவுமாக கைது செய்தது. சோதனையில் ₹37.3 லட்சம் பணம் மற்றும் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகை மற்றும் ஆவணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனமான ரிலயபிள் அனலிட்டிகல் லேபரேட்டரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிலுவையில் உள்ள பில்களை சரிசெய்வதற்கு ஈடாக ₹1.20 லட்சம் லஞ்சம் கேட்டதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (எஃப்எஸ்எஸ்ஏஐ) மும்பை அலுவலகத்தில் உதவி இயக்குனராக பணிபுரியும் அமோல் ஜக்தாப் மீது புகார் அளிக்கப்பட்டது.

FSSAI இன் உதவி இயக்குநர் பல இடைத்தரகர்கள் மற்றும் உணவு வணிக ஆபரேட்டர்களிடம் (FBOs) லஞ்சம் வாங்குவதாக சிபிஐ அதிகாரிகளுக்கு கிடைத்த புகாரை அடுத்து நடைபெற்ற சோதனையில் ₹1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கையும் களவுமாக சிக்கினார்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அதிகாரியின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ₹37.3 லட்சம் ரொக்கம், 45 கிராம் தங்கம், பல்வேறு அசையா சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளது.

இதுதொடர்பாக FSSAI இன் உதவி இயக்குநர் (தொழில்நுட்பம்) அமோல் ஜக்தாப், தானேயைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் இயக்குநர் விகாஸ் பரத்வாஜ், மூத்த மேலாளர் ஹர்ஷல் சவுகுலே மற்றும் குருநாத் துபுலே உள்ளிட்ட நான்கு பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 4 பேரும் மே 8-ம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ள நடைபெற்று வருகிறது.