நீலகிரி: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேடில், ஜெ.மறைவைத் தொடர்ந்து, கொலை, கொள்ளை நடைபெற்றது. கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கு புகுந்த கொள்ளைக் கும்பல், காவலாளியை கொலை செய்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டது. இதுதொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியின்போது காவல்துறை விசாரணை நடத்தியது. ஆனால், ஆட்சி மாறியதும், பின்னர் மீண்டும் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
ஆனால், கடந்த 6ந்தேதி (அக்டோபர்) இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழகஅரசு உத்தரவிட்டு, வழக்கின் அதிகாரியாக ஷகில் அக்தர் ஐஏஎஸ்-ஐ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அதைத்தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு தொடர்பாக கடந்த 22ம் தேதி சிபிசிஐடி போலீசார் கொடநாட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொடநாட்டிற்கு சென்று எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் இவ்வழக்கு சம்மந்தமாக விசாரணை நடத்தியதாக காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு பணிபுரியும் காசாளர், கணக்கீட்டாளர் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விசாரணைக்காக ஓரிரு நாட்களில் மீண்டும் கொடநாடு எஸ்டேட்டுக்கு சிபிசிஐடி போலீசார் வருவார்கள் என்றும், மேலாளர், காசாளர் என யாரும் வெளியூருக்கு செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோடநாடு வழக்கின் விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம்…