சென்னை:
சென்னையில் சிபிசிஐடி டிஎஸ்பி வீட்டில் மத்திய போதை பொருள் தடுப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், அவரது விட்டில் இருந்து போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சிபிசிஐடி டிஎஸ்பி ஒருவர் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக மத்திய போதைப்பொருள் கடத்தல் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரது வீட்டில், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும், அவரதுவீட்டில் குடியிருந்து வரும் வாடகைதாரரின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.
இதில், சிபிசிஐடி டிஎஸ்பி வீட்டில் வாடகைக்கு இருந்தவரிடம் இருந்து போதைப் பொருட்கள் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவினர், அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போதைப் பொருள் பதுக்கலில் தொடர்பு உடையவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel