
திருவாரூர்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கம்யூனிஸ்டு கட்சியினர் தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை திருவாரூர் ரெயில் நிலையத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.
திருவாரூர் அருகே உள்ள பேரளத்தில் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதன் காரணமாக கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கை கலப்பாக மாறியது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
[youtube-feed feed=1]