சென்னை:

காவிரி நீர் பங்கீடு குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தமிழக முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. கீழ் பாசான உரிமை என்ற அடிப்படையில் காவிரி நீர் மீது தமிழகத்திற்கே அதிக உரிமை உள்ளது.

தமிழகத்திற்கான நீரின் அளவு குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப்பட்டிருப்பது தமிழகத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

காவிரி நதி நீர் தேசிய சொத்து என்ற உத்தரவு வரவேற்கத்தக்கது. தமிழகத்திற்கு சாதகமான பல அம்சங்கள் இந்த தீர்ப்பில் இடம்பெற்றுள்ளது. இறுதி தீர்ப்பை ஆராய்ந்து சட்ட ஆலோசனை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நதி நீரை முழுமையாக பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்’’ என்று தெரிவித்துள்ர்.

மேலும், ‘‘திமுக ஆட்சியல் தமிழகம் உரிமையை இழந்துள்ளது. நிலத்தடிநீர் மட்டத்தை கொண்டு காவிரியில் நீர் திறப்பு அளவை குறைத்திருப்பது வருத்தம் அளிக்கிறது. அரசை குறை கூற வேண்டும் என பேசுபவர்கள் சாதகமான அம்சங்களை பற்றி கூற மறந்து விட்டனர்’’ என்று தெரிவித்துள்ளார்