புதுடெல்லி:
காவிரியில் தீர்ப்பாயம் உத்தரவுபடி தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகா அரசு அதற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளது.
தமிழ்நாடு, கர்நாடக மாநிலம் இடையே காவிரி பிரச்சினை தீரா பிரச்சினையாக உள்ளது. காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது குறித்து காவிரி நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயம், சுப்ரீம் கோர்ட்டு போடும் உத்தரவுகளை கர்நாடகா மதிப்பதில்லை.
cauvery issue
இதன்காரணமாக  கர்நாடக அரசிடம் ரூ.2,500 கோடி இழப்பீடு கேட்டு தமிழகஅரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு ஆகஸ்டு 8–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மனு விவரம்: 21 ஆண்டுகளாக சம்பா, குறுவை பயிர்களுக்கு ஜூன்,
செப்டம்பர் மாதங்களில் கர்நாடகாஅரசு தண்ணீரை திறந்துவிட்டது கிடையாது.
காவிரி நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை கர்நாடக அரசு எப்போதும் மதிப்பதில்லை. மத்திய அரசு பிறப்பித்த இடைக்கால உத்தரவையும் கர்நாடகஅரசு நிறைவேற்ற தவறிவிட்டது.
இதனால் தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிப்பு  அடைந்துள்ளது. மின்உற்பத்தி தடைபட்டது. இதன்மூலம் தமிழகத்துக்கு ரூ.1,045.75கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தீர்ப்பாயத்தின் உத்தரவை நிறைவேற்றாததால் ஏற்பட்ட நஷ்டங்களுக்கு அபராதமாக கர்நாடக அரசுக்கு ரூ.1,434கோடி அபராதம் விதிக்கவேண்டும். இந்த இழப்பீட்டை தமிழகத்துக்கு மொத்தமாக சேர்த்து ரூ.2,500கோடியாக வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்த மனு மீது விசாரணை நேற்று சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதிகள் வி.கோபாலகவுடா, ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு வந்தது..
வழக்குவிசாரணை அடுத்தமாதம் (ஆகஸ்டு) 8–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்தனர்.