டில்லி:
காவிரியில் இனிமேல் தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா முரண்டு பிடிக்கிறது.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து காவிரி மேற்பார்வை குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் கர்நாடக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தங்களது மாநிலத்தில் 4 அணைகளில் 27 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜுலை மாதம் வரை கர்நாடக மாநிலத்தின் குடிநீர் தேவைக்கு 21 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் கர்நாடகத்தில் மழை 18 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாகவும் தனது அறிக்கையில் அந்த மாநில அரசு கூறியுள்ளது.
எனவே காவிரியிலிருந்து தமிழகத்திற்கு இனிமேல் நீர் திறக்க முடியாத சூழல் நிலவுவதாக கர்நாடகா, காவிரி மேற்பார்வைக் குழு கூட்டத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு இதுவரை 13 டி.எம்.சி தண்ணீர் காவிரியிலிருந்து திறக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா கூறியுள்ளது.