Skip to content
  • Wed. Jul 15th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

ரூ.3,300 கோடி செலவில் காவிரி உபரி நீர் திட்டம்! திருவாரூரில் முதல்வர் புதிய அறிவிப்பு

Aug 28, 2020

திருவாரூர்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு செய்த நிலையில்,  மாவட்டத்தில் ரூ.3300 கோடியில் காவிரி உபரிநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறினார்.

மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்டங்களுக்குநேரில் சென்று ஆய்வு நடத்தி வரும் முதல்வர்,  நேற்று காலை கடலூர் மாவட்டத்திலும், மாலையில் நாகையிலும் ஆய்வு கூட்டம் நடத்தினார். பின்னர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.

இதையடுத்து, இன்று காலை திருவாரூர் வந்தடைந்தார். அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,  மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் குறித்து  ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக  மாவட் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைதுறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர், பயனர்களுக்கு  வீட்டுமனைப்பட்டா, கோவிட்-19 சிறப்பு உதவி தொகுப் பின் கீழ் புலம்பெயர்ந்து சொந்த ஊர் திரும்பியுள்ள இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான கடன் மற்றும் உற்பத்தியாளர் குழுக்களுக்கான மானியம், விலையில்லா வீட்டு மனை, பசுமை வீடு, பிரதம மந்திரி தொகுப்பு வீடு, அம்மா இரு சக்கர வாகனம், திட்டம் வேளாண் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

தொடர்ந்து,  திருவாரூர் மாவட்டத்து பல புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டினார்.  22 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 23 திட்டல் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அடிக்கல் நாட்டியும், 11 கோடியே 50 லட்சம் மதிப்பில் 14 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர்  ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று அதிகாரிகளுடன் மாவட்ட வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்,  திருவாரூர் மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை- திருத்துறைப்பூண்டி இடையே ரூ.336 கோடியில் இருவழிச்சாலை திட்டம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.  திருவாரூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 14 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.  இதுவரை 70 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் அரசு சார்பில் நடத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும்,  பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 64 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.1300 கோடி பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

காவிரியில் உபரிநீர் திறக்கப்படும்போது அது கடலில் சென்று வீணாக கலப்பதை தடுக்கும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் ரூ.3300 கோடியில் காவிரிஉபரிநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  இத்திட்டத்தின் மூலம் கடைமடை வரை வடிகால் வசதிகளை சிறப்புற ஏற்படுத்தி காவிரியில் வரும் அபரிமித உபரிநீரை விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாசனத்துக்காக கொண்டு செல்ல இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று கூறனிர்.

தமிழகஅரசு எப்போதும் விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளின் பாதுகாப்புக்காகவே பல்வேறு திட்டங்களை எப்போதும் செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Post navigation

அண்ணாமலை உள்பட பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு
அழகன்குளம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஓஎன்ஜிசி ஆய்வுப் பணிகள்: கைவிட வைகோ வலியுறுத்தல்

Related Post

தமிழ் நாடு

அண்ணா பல்கலைக்கழக PhD மாணவர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

உலகம்

உலகம்

“திறந்திடு சீசேம்” என ஹோர்முஸைத் திறந்த டிரம்ப்… கப்பல்கள் வெளியேற 20% கப்பம் வசூல்…

July 14, 2026 Sundar
உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது; ஈரான் கூற்றை மறுத்த டிரம்ப்

July 13, 2026 Sundar
உலகம்

பாங்காக் பப் தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு, 22 பேர் கவலைக்கிடம்

July 13, 2026 Sundar
உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer