டில்லி

மிழகத்துக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

இன்று டில்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் நடைபெற்றது . இந்தக் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது.  இதில் தமிழகம், கர்நாடகா மாநில அதிகாரிகள் பங்கேற்றனர் .

தமிழகத்துக்கு 16 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடத் தமிழக அதிகாரிகள் கோரிக்கை வைதத்னர்.

எனவே காவிரியில் தமிழ்நாட்டுக்கு மேலும் 3,000 கன அடி நீரைக் கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்துக்குக் காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது .

அதாவது வரும் 16 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தமிழகத்துக்கு வினாடிக்கு 3,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையத்துக்குக் காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது .