சென்னை:

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடந்துள்ள நிலையில், பிரபல நடிகரும், டைரக்டருமான சசிகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில், காவிரி பிரச்சினை குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில்,

இது விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்னை இல்லை. சோறு சாப்பிடுகிற ஒவ்வொருவருக்குமான பிரச்னை. காவிரி மேலாண்மை வாரியம் அமைவதுதான் எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு. உப்பிட்டவர்களை உள்ளளவும் நினை என்பார்கள். அப்படியென்றால் சோறிட்டவர்களை…?

காவிரி மேலாண்மை வாரியம் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, சினிமாத்துறையினரும் காவிரி பிரச்சினைக்காக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான சசிகுமாரும் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.