திருவாருர்,
காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்திற்கு வஞ்சகம் செய்கிறது என்று இந்திய கம்யூனிஸ் மாநில தலைவர் முத்தரசன் கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி திருவாரூர் அருகே உள்ள கொடிக்காபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, முத்தரசன் கூறியதாவது:-

காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைவதை தடுத்து தமிழகத்திற்கு துரோகம் இழைத்துள்ளது. இந்த போக்கை மத்திய அரசு உடனே கைவிட்டு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழுவை உடனே அமைக்க வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 175 கி.மீ தூரம் ரெயில் பாதையில் 48 மணிநேரம் போராட்டம் தொடங்கி உள்ளோம். இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Patrikai.com official YouTube Channel