காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலை: தமிழிசை, பொன்னார் பேட்டி

Must read

 திருப்பூர்,
காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்படுகிறது என்று தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை, மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்னன் கூறியுள்ளனர்.
பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரில் நடந்தது.கூட்டத்தில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ், தேசிய செயலாளர்கள் எச்.ராஜா, ரவி, தேசிய பொதுச் செயலாளர் இல. கணேசன் எம்.பி., மாநில பொதுச் செயலாளர்கள் வானதி சீனீவாசன், கருப்பு. முருகானந்தம், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
kaveri-pon
பின்னர் தமிழிசை சவுந்தர்ராஜன்  கூறியதாவது:
காவிரி பிரச்சினையில் பா.ஜனதா நடுநிலையோடு செயல்படுகிறது. காவிரிக்காக தற்போது உண்ணாவிரத போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. அந்த கட்சியின் ஆட்சியில் எங்கே போனது நடுநிலை?
தமிழகத்தில் தற்போது துப்பாக்கி கலாச்சாரம் வந்துள்ளது. இதில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி சட்டம்- ஒழுங்கை பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
இதைதொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும். தமிழகத்தில் தற்போது காவிரி பிரச்சினையை பெரிதாக்கி அரசியலாக்கி ஆதாயம் தேடி கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க. – காங்கிரஸ் ஆட்சியின் போதே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
எனவே தமிழகத்துக்கு துரோகத்தை இழைத்தது தி.மு.க.வும், காங்கிரசும் தான். இந்த இரு கட்சிகளும் தாங்கள் செய்த துரோகத்தை மறைக்கவே இப்போது போராட்டத்தை நடத்து கிறார்கள்.
முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவ மனைக்கு அமித்ஷா, மத்திய மந்திரி அருண் ஜெட்லி ஆகியோர் சென்று நலம் விசாரித்துள்ளனர்.
மருத்துவமனைக்கு பிரதமர் மோடியின் வருகை குறித்து முடிவு எடுக்கப்படும்.  உரிய நேரத்தில் அந்த சந்திப்பு நிகழும் என்று கூறினார்.

More articles

Latest article