சென்னை,
ந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பேருந்து சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்தை அசோக் லைலேண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
சுற்றுசூழல் மாசு படுவதை தவிர்க்க எலக்ட்ரிக் பேருந்துகள், எரிவாயு (கேஸ்) பேருந்து உலக நாடுகளில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் பிரபல நிறுவனமாக அசோக் லைலேண்ட் நிறுவனம் சுற்று சூழல் மாறுபடுவதை தவிர்க்க எலக்டிரிக் பேருந்து தயாரித்துள்ளது.
இதன் சிறப்பம்சம் குறித்து அசோக் லைலேண்ட் நிறுவனத்தின்  மேலாண்மை இயக்குநர் வினோத் தசாரி கூறியதாவது
இந்த பேருந்து சுற்றுச்சூழல் மாசு இல்லாதது, சத்தம் குறைவு, போக்குவரத்து நெரிசலில் மின்தேவை பயன்பாடு குறைவாக இருக்கும் ஆகியவை இந்த பேருந்தின் சிறப்பு அம்சம் என்றார்.
மேலும் 3 மணி நேரத்துக்கு பேட்ரியை சார்ஜ் செய்தால், 150 கி.மீ முதல் 300 கி.மீ வரை இந்த பேருந்தை இயக்க முடியும் என்றும், இந்த பேருந்தை பாரம்பரிய இடங்களிலும், மலைப்பாங்கான இடங்களிலும் பயன்படுத்த முடியும் என்றும் கூறினார்.
இதன் விலை ஒன்றரை கோடி ரூபாய் முதல் 3 கோடி ரூபாய் வரை இருக்கும் என்றும், ஆனாலும், விலை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அந்த இந்த பேருந்தை தயாரிக்க ஆரம்ப முதலீடு 22 கோடி செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஏப்ரல் 2014 ல்இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டது என்றும், இந்தியாவில்  7 இடங்களில் தொழிற்சாலை அமைத்து, பேருந்து தயாரிக்க படுவதாகவும், 2020ம் ஆண்டுகளுக்குள் பெரும்பாலான இடங்களில் மின்சாரத்தில் இயங்கும் வகையில் வாகனங்கள் உருவாக்கப்படும் என்றும்,  சுற்றுப்புற சூழல் மாசு அதிகமுள்ள இடங்களை அடையாளம் கண்டு, அங்கு இந்த பேருந்தை வழங்க உள்ளதாகவும் அசோக் லைலேண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.