சென்னை: சாதிச்சான்றிதழ் மற்றும் சாதி ஒதுக்கீட்டை நீக்கினால் 2050ல் சாதி ஒழியும் என்று வழக்கு ஒன்றில், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கருத்து தெரிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் சாதிகளின் பெயரினாலும், சாதி ரீதியிலான இடஒதுக்கீடு காரணமாகவும் பல்வேறு பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று வழக்கு ஒன்றின் விசரணையின்போது, கல்விச் சான்றிதழ்களில் சாதி பெயரை குறிப்பிடுவதை நீக்கினால் 2050க்குள்ளாவது சாதி ஒழியும் என்று ஐகோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
பி.சி.,எம்.பி.சி., பிரிவினருக்கு அரசு பணி வழங்கியது பற்றிய தகவலை வெளியிட மறுத்த வழக்கில் நீதிபதி வைத்தியநாதன் இந்த கருத்து தெரிவித்தார்
தமிழக மக்கள் சாதி, மத பாகுபாடின்றி ஒரே குடையின் கீழ் நிற்பர் என்று கூறிய நீதிபதி, இந்த தகவலை வெளியிட்டால் சாதி பிரச்சனை வரும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அச்சப்படுவது மாயை, கற்பனையானது எனத் தெரிவித்துள்ளார்.