சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுதோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

மேலும், நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு என்று கூறியவர், அடுத்த தேர்தலில் வண்டி வண்டி பணத்தைக்கொட்டப் போகிறார்கள், ஊழலுக்கு எதிராக வாக்களியுங்கள் என்றவர், மணாவர்கள் சாதி, மதத்தை தாண்டி செல்லுங்கள் என்றும் அறிவுரை கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வியில் சிறந்து விளங்க ஊக்கமளிக்கும் நோக்குடன், கடந்த இரு ஆண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கி வருகிறார். தவெக சார்பில் மூன்றாம் ஆண்டாக பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா 3 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, இன்று முதல் கட்ட   பாராட்டு விழா மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று காலை 9 மணிக்கு மாமல்லபுரம் 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஓட்டலில்  தொடங்கிய நிகழ்ச்சியில், முதல்கட்டமாக,   சென்னை, அரியலூர், சிவகங்கை உள்ளிட்ட 16 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 600 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசிய தவெக தலைவர் விஜய் கூறியதாவது,  , ‘இளம் தலைவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் வணக்கம். ”சாதனை படைத்த அனைத்து மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொளகிறேன். உங்க எல்லாரையும் சந்தித்ததில் பெரிய மகிழ்ச்சி.  படிப்பில் சாதிக்கணும் என்பது முக்கியம்தான்.  படிப்பும் சாதனைதான். அதை மறுக்கவில்லை. ஆனால்  அதுக்குன்னு ஒரே ஒரு படிப்புல மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து படிச்சு அதுல மட்டும் சாதிக்கணும்னு அழுத்தம் ஏத்திக்க தேவை இல்லை.

 குறிப்பிட்ட ஒரு படிப்பில் மட்டும் சாதிக்க வேண்டும் என நினைப்பது சாதனை கிடையாது. ஒரே விஷயத்தை நினைத்து கவலையடையாதீர்கள், அந்தளவு மன அழுத்திற்குள்ளாக வேண்டியத் தேவை இல்லை.  நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு. அதைத் தாண்டி உலகம் மிகவும் பெரியது அது ரொம்ப பெருசு. அதுல நீங்க சாதிக்க நிறைய விஷயங்கள் இருக்கு. மனதை பலமாகவும் ஜனநாயகமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

ஜனநாயகம் இருந்தால்தான் உலகத்தின் அனைத்து துறைகளும் சமமாக இருக்கும். வீட்டில் இருப்பவர்களை முதலில் ஜனநாயகக் கடமையை முறையாக செய்ய சொல்லுங்கள். நல்லவர்கள், நம்பிக்கையானவர்கள், ஊழல் செய்யாதவர்களை தேர்வு செய்ய சொல்லுங்கள். பணம் கொடுத்து வாக்குகளை பெறலாம் என நினைக்கிறார்கள். யாரும் பணம் வாங்கிவிட்டு வாக்காளிக்கதீர்கள், பணம் வாங்கும் கலாசாரத்தையும் ஊக்குவிக்காதீர்கள்.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இதே நிகழ்வுல, ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது, அந்த கலாச்சாரத்தை ஊக்குவிக்காதீங்கன்னு பெற்றோரிடம் சொல்லுங்க என்று சொல்லி யிருந்தேன். அதை அப்படியே இப்பவும் பின்பற்றுங்க. ஆனா, நீங்களே பாருங்க. அடுத்த வருஷம் வண்டி வண்டியா பணத்தை கொண்டு வந்து கொட்ட போறாங்க. அது எல்லாமே உங்கக்கிட்ட இருந்து கொள்ளையடிச்ச பணம் அது. நீங்க என்ன பண்ண போறீங்க. என்ன பண்ணணும்னு உங்களுக்கு சரியா தெரியும்.

அடுத்தாண்டு தேர்தலில் வண்டிவண்டியாக பணத்தை கொட்டப் போகிறார்கள். அது மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம்தான். என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கே தெரியும். எவ்வளவு தடை வந்தாலும் அவர்களுக்கு பிடித்த துறைகளில் சாதிப்பார்கள், அதனால் பெற்றோர்கள் மாணவர்களின் விருப்பத்தை தெரிந்து வழிநடத்துங்கள்.

சாதி, மதத்தை வைத்து பிரிவினை வளர்க்கும் சிந்தனை பக்கம் போகாதீர்கள். விவசாயிகள், தொழிலாளர்கள் சாதி, மதம் பார்த்து உற்பத்தி செய்யவில்லை. இயற்கையோட வெயில் மழைல சாதி இருக்கா?.

போதைப் பொருளை போன்று சாதி, மதத்தை தூரமாக ஒதுக்கி வைத்துவிடுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது.

தந்தை பெரியாருக்கு சாதி சாயம் பூசுகிறார்கள். மத்தியஅரசு தேர்வில் சாதி சார்ந்த கேள்வி வருகிறது. இதெல்லாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் மேல் ஆகியும் இன்னும் இதை படித்தவர்களும் கூட சிலர் தலையில் தூக்கி வைத்து கொள்வதை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது…!இந்த இருபதாம் நூற்றாண்டில் ஜாதி ,மதம் தேவையற்ற ஒன்று…..!

செயற்கை நுண்ணறிவு காலத்தில் இருக்கும் நாம், அறிவியல் பூர்வமாக சிந்திக்க வேண்டும்”  ஏஐ தொழில்நுட்பத்தை எதிர்கொள்ள அதுவே ஒரே வழி” என்றார்.

ஜனநாயகத்தோடு இருங்க. ஜனநாயகவாதியா இருந்தாதான் சுதந்திரமா இருக்க முடியும். உங்க வீட்ல இருக்க எல்லார்க்கிட்டயும் அவங்க ஜனநாயகக் கடமையை சரியா செய்ய சொல்லுங்க. ஜனநாயக கடமையை சரியாக செய்வது ரொம்ப எளிமையான விஷயம்தான். அதாவது நல்லவங்க, நேர்மையானவங்க, இதுவரைக்கும் ஊழல் பண்ணாத நல்லவங்கள நம்பிக்கையானவங்கள தேர்வு செய்ய சொல்லுங்க.

பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள். உங்க குழந்தைகள் மேல எந்த அழுத்தத்தையும் போடாதீங்க. அவங்களுக்கு என்ன பிடிக்குதுன்னு தெரிஞ்சு வழிநடத்துங்க. எத்தனை தடைகள் வந்தாலும் அவரவருக்கு பிடித்த துறைகளில் நிச்சயம் சாதித்து காட்டுவார்கள். சாதி மதத்தை வைத்து பிரிவினையை வளர்க்கிற சிந்தனை பக்கம் போய் விடாதீர்கள்.

 இந்த உலகில் எது சரி எது தவறு என யோசித்தாலே குழப்பம் இல்லாத வாழ்க்கையை வாழலாம். எதுக்கும் ரொம்ப எமோஷனல் ஆகாதீங்க. டெக்னிக்கல் மற்றும் அறிவியல் அப்ரோச் உடனே வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள்.

இவ்வாறு கூறினார்.